திருப்பூர் மாவட்ட கபாடிக் கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
இதில் மிக இளையோர் பிரிவில் பங்கேற்க 01.03.2009க்குப் பின் பிறந்திருக்க வேண்டும் (16 வயதுக்குள்), எடை: 55 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும். வயது சான்றிதழ் ஆதார் கார்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
மூத்தோர் பிரிவுக்கு வயது: வயது வரம்பு இல்லை. எடை 75 கிலோவுக்குள் இருக்க வேண்டும். பொறுக்குத் தேர்வுப் போட்டி செயற்கை ஆடுகளத்தில் நடைபெறுவதால் அனைவரும் மேட் ஷூ அணிந்து வர வேண்டும். கலந்து கொள்ளும் அனைத்து சிறுமிகள் மற்றும் மூத்தோர் பெர்கள் அணிகள் அனைவருக்கும் மதிய உணவும், போக்குவரத்து செலவும் மாவட்ட கபாடிக் கழகத்தின் சார்பாக வழங்கப்படும். மாவட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் மிக இளையோர் மற்றும் மூத்தோர் பெண்கள் அணிக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, மாநில சேம்பியன்ஷிப் போட்டிக்கு மாவட்ட கபாடிக் கழகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மேற்கண்ட தகுதியுள்ள சிறுமிகள், மூத்தோர் பெயர்கள் விளையாட்டு வீராங்கனைகள் பொறுக்குத் தேர்வில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.