இரண்டு கால பூஜையும் இல்லை கருவறையில் எரிய நெய் தீபமும் இல்லை எதுக்கு அறங்காவலர் குழு?தமிழ்நாடு இந்து சேவா சங் கடும் கண்டனம்
சென்னை ஆவடி நந்தவனம் மேட்டூர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அறங்காவலர்களை அமைத்து கோவிலின் புனிதத்தை கெடுப்பதா? ஒரு நேர விளக்கேற்ற கூட வக்கில்லாத அறங்காவலர்? ஒரு வேலை கூட முறையான பூஜை இல்லை உடனடியாக அறங்காவலர் குழுவை கலைக்க வேண்டும் மாற்று மதத்தின் தூண்டுதலின் பேரில் கோவிலின் புனிதத்தை கெடுப்பதா? இரண்டு நாட்களாக கோவில் கருவறையில் நெய் தீப விளக்கு கூட இல்லாத மோசமான நிலையை உருவாக்கிய அறங்காவலர்கள் குழுவை இந்து சமய அறநிலைத் துறையே ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தை விட்டு வெளியேறு உடனடியாக ஆறு கால நெய் தீப விளக்கு எரியவும் இரண்டு கால முறையான பூஜையும் நடக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பாக கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு தமிழ்நாடு இந்து சேவா சங்க மாநில தலைவர் ஆவடி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்