துாத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா : அக்.19- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


 துாத்துக்குடி, ஸ்ரீ பாகம்பரியால் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அக்டோபர் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது என அறங்காவலர் குழு அறிவிப்பு.

ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் அறங்காவலர் குழுவினர் சிவன் கோவில் தலைமை பட்டர் செல்வம் தலைமையில் 17/10/24 இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்;

தூத்துக்குடி நகரின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பரியால் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திரு கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, வருகிற 19ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  

முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு, மஹா கணபதி ஹோம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 30ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 9ம் திருநாளான 27ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 

கொடியேற்றம் தொடங்கும் 17 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.

11ம் திருநாளான 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யான வைபவம் நடக்கிறது. பூஜைகளை பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், குரு, சண்முகம் ஆகியோர் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, ஆறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், பி.சாந்தி, விஎம் ஜெயலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர். 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை பட்டர் செல்வம் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் திருக்கோயில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி அறங்காவலர்கள் ஆறுமுகம் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post