புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் புதுவை துணை நிலை ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் புதுவை துணை நிலை ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகிகள் அதன் தலைவர் பேராசிரியர் 
மு.ராமதாஸ் தலைமையில், சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன், பொதுச்செயலாளர் எ.மு. ராஜன் , பொருளாளர் செல்வக்குமாரி, மகளிர் அணி தலைவி விமலா பெரியாண்டி ஆகியோர் புதுவை மாநில துணை நிலை ஆளுநர்  சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து ,
 பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கி அதில் குறிப்பிட்டுள்ள பல்வேறு விஷயங்கள் பற்றிக் கலந்து  பேசினர்.
 அதில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு நிர்வாகக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், புதுவை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், கிரிஷி விஞ்ஞான கேந்திரா  ஊழியர்கள் 153 பேருக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகப்  பிரச்சனைகளை  தீர்க்க உடனடியாக மேலாண் இயக்குனர் மற்றும் பொது மேலாளர்களை நியமிக்க வேண்டும், மூர்த்திக்குப்பம் கிராமத்தில் மீனவர்களுக்குச் சொந்தமான நிலத்தை சுற்றுலாத் துறைக்கான ஒதுக்கீடு செய்ததை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதோடு அது பற்றி விளக்கமான ஆலோசனைகளையும் வழங்கினர்.
 கோரிக்கைகளை உன்னிப்பாக கேட்ட ஆளுநர் அதில்  ஒன்றிரண்டை  தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்து நிறைவேற்றி தர உறுதி அளித்தார்.
Previous Post Next Post