பாரத ஸ்டேட் வங்கியை கைப்பாவையாக பயன்படுத்தும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!


 பாரத ஸ்டேட் வங்கியை கைப்பாவையாக பயன்படுத்தும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

பாரத ஸ்டேட் வங்கியை கைப்பாவையாக பயன்படுத்தி மோடி அரசு, இதுவரை செய்த முறைகேடுகள் மற்றும் சதிகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி தூத்துக்குடியில் இன்று காலை எட்டையாபுரம் ரோட்டில் உள்ள சிட்டி டவர் அருகே உள்ள பாரத ஸ்டேட் பாங்க் கிளை முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவா் முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது இதில் காங்கிரஸார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  

ஆர்பாட்டத்தில், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன்சில்வா, மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர் ராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகுல், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் மஜீத், இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் , முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவர் முத்து விஜயா, மாவட்ட பொது செயலாளர்கள் மிக்கேல், சாந்திமேரி, மாவட்ட துணை தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், சீனிவாசன், மைக்கில் பிரபாகர்,  சின்னகாளை, ஜெயஜோதி, மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி குமார முருகேசன் ,  ஜான்சன், கதிர்வேல், இஸ்தோர் மஸ்கர்னாஸ், முத்துபாண்டி, வார்டு தலைவர்கள் கனகராஜ், அருண், கமலேஷ்  ,மகேந்திரன், மகாலிங்கம், ராஜா,  பெனடிக்ட், அந்தோணி சாமி, வெள்ளையன், ரகுநாதன், மாரியப்பன், சுப்பிரமணியன், கிருஷ்ணன், ஆரோக்கியம், மணி, சித்திரை பால்ராஜ், சரஸ்வதி நாதன்,  மகாராஜன், ஜோபாய் பச்சேக், சுரேஷ், தாமஸ், உள்பட பலர்  கலந்து கொண்டனர்.


செய்தியாளர்- அஹமத்

புகைப்படம் - சித்திக்

Previous Post Next Post