ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் வலம் வந்த சிறுத்தைகள். பொதுமக்கள் அச்சம்.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப் பகுதியில், மான்,யானை, சிறு த்தை, புலி, காட்டெருமை, கரடி, செந் நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு கள் வசித்து வருகின்றன.இவை அவ் வப் போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு தேடி, ஊருக்குள் புகுந்து, விவசாய பயிர்கள் மற்றும் கால்நடைகளை,வேட்டையாடிவருவது வாடிக்கையாக உள்ளது.கடந்த ஒரு வார காலமாக. சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம், இண்டியம்பாளையம் பகுதியில், சிறு த்தையின் நடமாட்டத்தைகண்டபொது மக்கள் சத்தியமங்கலம் வனத்துறை  யினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை யினர், அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து, ஊருக் குள் உலா வருவது சிறுத்தையா? என கண்காணிக்கவும், சிறுத்தையை பிடி க்கவும், வனத்துறை யினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்த நிலையில், நேற்று இரவு சத்திய மங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம்,கக்கரா குட் டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரத்தில், இரண்டு சிறுத்தைகள் நடமாடியதை அவ்வழியே வாகனத்தில் வந்த இரு வர் அச்சமடைந்து, தனது செல்போனி ல், வீடியோ எடுத்து சமூக வலைதளங் களில் பதிவிட்டனர.


இதனால் அச்சமடைந்துள்ள உக்கரம்  பகுதி கிராம மக்கள் ஊருக்குள் வலம் வரும் சிறுத்தைகளை உடனடியாக, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, வனத்துறையினருக்கு கோரி க்கை  விடுத்துள்ளனர். கடந்த வாரமே பொதுமக்கள் சிறுத்தைகளின் நடமாட் டத்தை வனத்துறையினருக்கு தெரி வித்த நிலையில், மீண்டும் சிறுத்தை களின் நடமாட்டம் அறிந்த பொது மக் கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.






Previous Post Next Post