கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு சண்டை போட்டியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் அசத்தல்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான  வாள் வீச்சு சண்டை  போட்டியில், கலந்து கொண்ட வீராங்கனைகள் வாளை அசத்தலாக சுழற்றி விளையாடினர்

தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில், மாநில  அளவிலான வாள் வீச்சு சாம்பியன்ஷிப்  போட்டி,கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள கதிர் கலை அறிவியல்  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..அசாமில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தேர்வு போட்டிகளாக நடைபெற்ற இதில் கோவை, மதுரை,கன்னியாகுமரி,திருச்சி,என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இரு பாலருக்குமான இப்போட்டியில்,சீனியர் பிரிவில், , பாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில்  முன்னதாக பெண்களுக்கான  போட்டியில் . வாளை அசத்தலாக சுழற்றி சண்டையிட்டனர்..முன்னதாக போட்டிகளை கல்லூரியின் தலைவர் கதிர்,செயலாளர் லாவண்யா கதிர்,முதல்வர் கற்பகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்..
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வாள் வீச்சு போட்டிகள் கோவையில் நடைபெற்று வருவதாகவும்,இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர், விரைவில் அசாமில்  நடக்க உள்ள தேசிய  அளவிலான வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்   தெரிவித்தனர். தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தின் தலைவர் சுப்பையா தனசேகர்,கோவை மாவட்ட செயலாளர் தியாகு நாகராஜ்,ஆகியோர்  தெரிவித்தனர்..கடந்த  ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி   இடம் பிடித்த விளையாடிய நிலையில்,  தற்போது பெண்கள் பலர் வாள் வீச்சு போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி வருவது குறிப்பிடதக்கது..
Previous Post Next Post