கோவை கீதம் இசை குழுவின் நான்காவது இசை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது கோவை கீதம் இசை குழுவின் நான்காவது இன்னிசை நிகழ்ச்சி பீளமேடு ஹோட்டல் விஜய் எலன்சாவில் நேற்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண் மற்றும் பெண் பாடகர்கள் கலந்து கொண்டு திரை இசை பிரபல பழைய மற்றும் புதியபாடல்கள் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர் குறிப்பாக சங்கர் மகாதேவன் பாடிய உருகுதே மருகுதே ரஞ்சிதமே ரஞ்சிதமே பாட்டு தலைவன் பாடினால் தேன்மொழி இன்ப தேன்மொழி நிலவொன்று கண்டேன் மலர்ந்து மலராத பொன்னந்தி மாலைப்பொழுது உள்ளிட்ட அனைத்து பிண்ணனி பாடகர்களின் பாடல்களை பாடி அகத்தினர்கள் இந்நிகழ்ச்சியில் சபர்பன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ முதல் முதலாக மேடையில் ஏறி பல்வேறு பாடல்களை பாடி அசத்தினார் மேலும் இந்நிகழ்ச்சியில் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட 100 க்கு மேற்பட்ட பாடல்களை பாடினார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி சிறப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் ஏராளமான பரிசு பொருட்களளை கீதம் இசைக்குழு நிர்வாகி நா லோகு மற்றும் தாமரை செல்வி வழங்கினார்கள் காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சிவராமன் சுனேஷ் பூபதி பார்த்தசாரதி ஆகியோர் தொகுத்து வழங்கினர் நிகழ்ச்சி முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாமரைசெல்வி நன்றி தெரிவித்தார்