தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாநகராட்சி பூங்கா விரைவில் பயன்பாட்டிற்கு வரும் - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.!

 

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாநகராட்சி பூங்கா விரைவில் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு வரும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் பல் வேறு பூங்காக்களும் சீர மைக்கப்பட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. மாநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பூங்கா பராமரிப்பு பணிகள், மாநகர மக்களுக் கான வளர்ச்சி திட்டப்ப ணிகளை மாநகராட்சி மேயர் நேரில் சென்று பார் வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இதே போல் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள ஹெரிடேஜ் பாரம்பரிய பூங்காவில் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை மேயர் ஜெகன்பெ ரியசாமி, அதிகாரிகள் குழுவினருடன் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட் சியை சிறந்த மாநகராட்சியாக மாற்றிடும் வகையில் மக்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப் பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காக்களும் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஹெரிடேஜ் பூங்காவில் விடுதலை போராட்ட வீரர்களின் படங்கள் மற்றும் புராதன சின்னங்கள் அடங்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள்  கலெக்டர், எஸ்பி அலுவலகங்களுக்கு வருபவர்கள் பூங்காவை பயன்படுத்திடும் வகை யில் புதுப்பிக்கும் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் விரைவில் நிறைபெற்று பூங்கா பொது மக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்ப டும். என்றார்.

ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், மேயரின் உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகர்:ஜேஸ்பர், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post