சூடித்தந்த சுடர்க்கொடிக்கு சீர் கொண்டு வந்த பெண்கள்.... திருவில்லிப்புதூரில் கோலாகலம்!

திருவில்லிபுத்தூரில் பெண்ணாக அவதரித்து, ரங்கநாதருக்கு பூமாலை சூடிக்கொடுத்து,  பாமாலை வழங்கினார். ரங்கநாதரை மணந்து     மகாலட்சுமியின் அம்சமானார் ஆண்டாள். 

ஆண்டாள் நாச்சியா சூடிய திருப்பாவை   மார்கழி மாதத்தில் தான் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில்,  திருவில்லிப்புதூர் ஆண்டாள் கோவிலில் 'முப்பதும் தப்பாமே' என்ற தலைப்பில் திருப்பாவை முற்றோதல் மாநாடு நடைபெறுகிறது.

 ஆடிப்பூர கொட்டகையில் திருப்பாவை முற்றோதல் மாநாடு  கோலாகலமாக நடைபெற்றது. மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர், ஆழ்வார்திருநகரி ரெங்கராமானுஜ ஜீயர், வீரவநல்லூர் ராமபிரம்மய ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.  

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 80 மடங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், ஊர்வலமாக கலந்து கொண்டு,  ஆண்டாள் நாச்சியாருக்கு சீர்வரிசை சுமந்து சென்று வழங்கினர்.  

ஆண்டாள் - ரங்கமன்னார் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.