தூத்துக்குடியில் 24ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

 

பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 24ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக வருகின்ற 24.01.2023 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை (ஜன.21) நடைபெறவிருந்த 110/22கிவோதுணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post