தூத்துக்குடியில் வருகிற ஜனவரி 21-ல் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைத்திட வல்லநாட்டிலிருந்து குடிநீர் கொண்டுவந்து கொடுத்த கோமான் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் அறிவிப்புக்கு இணங்க குரூஸ்பர்னாந்து மணி மண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா வருகிற ஜனவரி 21 சனிக்கிழமை மதியம் 2.30 மணி அளவில் பாளை ரோடு – சிதம்பரநகர் பேரூந்து நிறுத்தம் எதிரில் நடைபெற இருக்கிறது. தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அன்றைய தினம் இரவு 7.00 மணி அளவில் குறுக்குச்சாலையில் மாவட்டச் செயலாளராகிய என்னுடைய தலைமையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் பு.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலையில் நடைபெறும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.