கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தகவல்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேசானை தொடர்ந்து, கூகுள் நிறுவனமும் அதன் மொத்த பணியாளர்களில், செயல்திறன் சரியில்லாத 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.
அமெரிக்காவில் பணி நீக்கம் தொடங்கிய நிலையில் Area 120, Checks, Tables, Stack and ThreadBite, போன்ற தயாரிப்புகளுக்குப் பொறுப்பான Google இன் - ஹவுஸ் இன்குபேட்டர் , Google தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் பணிநீக்கங்களால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று Tech Crunch தகவல்கள் தெரிவிக்கின்றன.