புளியம்பட்டி- ஆக - 11
புளியம்பட்டி அருகே உள்ள கிராம பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, சத்தியமங்கலம் கடம்பூரைச் சேர்ந்த சித்தேஷ்-வயது 22 என்ற வாலிபர், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வழக்கில்
புளியம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், தலைமை காவலர் பூங்கொடி மற்றும் சத்தியமங்கலம்,மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராணி சோபியா ஆகியோர் சிறுமியை மீட்டு, சிறுமியை பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.கடத்திச் சென்ற நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.