தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் காமராஜர் 14-வார்டு பகுதியில் லெனின் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் என்று திடீரென ஆறடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது
இதனை அறிந்து வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். அப்போது மாடிப்படியின் அடியில் குழிக்குள் மறைந்திருந்த இருந்த பாம்பை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி
தீயணைப்புத் துறையினர் லாபகரமாக பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.