தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மகளிரணி மற்றும் மாணவரணியினருக்கான, திராவிட மாடல் குறித்த பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சத்தியபாமா திருமண மண்டபத்தில் அரங்கம் நிறைந்த இந்த பயிலரங்கம் நிகழ்ச்சிக்கு, தமிழக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். கோவில்பட்டி நகராட்சி சேர்மனும், நகர தி.மு.க., செயலாளருமான கருணாநிதி முன்னிலை வகித்தார்.
மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி, பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டு, பயிலரங்கில் கலந்து கொண்ட மகளிரணி மற்றும் மாணவரணியினருக்கு, திராவிட மாடல் குறித்து பயிற்சியளித்தனர்.
பயிற்சியின்போது இடையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நூற்றிற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கயத்தாறு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் ஏஞ்சலா, பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேதுரத்தினம்,
விவசாய அணி அமைப்பாளர் ராமர் , நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் நகர்மன்ற உறுப்பினர்கள் லவராஜா, பொறியாளர் தவமணி, ஜாஸ்மின் லூர்துமேரி, உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.