தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் தங்களது விடுதிகளை பதிவு செய்யும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை தங்களது விடுதி பதிவு குறித்து 13.05.2022-ம் தேதிக்குள் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
அணுக வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி, தொலைபேசி எண்:0461-2325608.