'இது நாகாலாந்து அல்ல... தமிழ்நாடு...' - ஆளுனர் ரவி மீது திமுகவின் நாளேடான முரசொலி பாய்ச்சல்.!


நீட் விவகாரத்தில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுனர் ரவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தனது தலையங்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது..

"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" - என  தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடு குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளது! மேலும் அதில்..

காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்விற்கு பின் ஆளுநரான ஆர்.என்.ரவியின் மிரட்டல்,  உருட்டல் பாணிகள் அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.

ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நீட்-க்கு எதிரான தீர்மானத்தின் நிலை என்னவென்று தெரியாதபோது நீட்-க்கு ஆதரவான கருத்தை அவர் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்?

இருமொழிக் கொள்கை, நீட் வேண்டாம் என தமிழ்நாடு ஒன்றிணைந்து நிற்பதை உணர்ந்து, தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சிக்க வேண்டும்.

ஆளுநர் ரவி எத்தகைய கருத்தை தெரிவிக்கும் முன் தமிழ்நாட்டை புரிந்து, வரலாற்றைத் தெளிவாக தெரிந்துகொண்டு கூறுவது அவரது பதவிக்கு பெருமை.

பெரியண்ணன் மனப்பான்மையோடு செயல்பட, இது நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு என்பதை உணர்ந்திட வேண்டும்.

எனவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#RNRavi | #Murasoli | #DMK

Previous Post Next Post