புதுடெல்லியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மனித உரிமை ஆணையம் சென்று மீனவர்கள் கூட்டமைப்பு கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மியன்மார் சிறையில் உள்ள தமிழகம் மற்றும் அந்தமானை சேர்ந்த 10 மீனவர்கள் விடுதலை.
புதுடெல்லியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தமிழக, பாண்டிச்சேரி மற்றும் அந்தமானை சேர்ந்த 23 மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் தேசிய கப்பல் வாரியத்தின் உறுப்பினர் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு தலைவர் கேப்டன் சஞ்சய்பிரஷார் 23.11.2021 அன்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தமன் ரூபால அவர்களை சந்தித்தனர்.இதில் அந்தமான் மீனவ பிரதிநிதி ரூபின் பர்ணான்டோ மத்திய மீன்வளத்துறை அமைச்சரிடம் மியன்மார் சிறையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழ்நாடு மற்றும் அந்தமானை சேர்ந்த 10 மீனவர்கள் கைதாகி சிறையில் உள்ளத்தை சுட்டி காட்டி துறை சார்ந்த துரித நடவடிக்கைகள் எடுக்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து கேப்டன் சஞ்சய் பிரஷார் அவர்களின் வழிகாட்டலில் கடல்சார் மக்கள் நல சங்கமம் பொதுச்செயலாளர் பிரவீன்குமார் பரதவர், அருட்பணி சர்ச்சில், ஜெரோன்குமார், லோவியா தெரஸ், புதுச்சேரி விசைப்படகு உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ராமர், மோகன், கடல்சார் மக்கள் நல சங்கமம் பிரதிநிதிகள் ரொனால்ட், ஜெபராஜ், மைக்கேல், ராஜேஸ்வரி மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகள் 24.11.2021 அன்று டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம் அலுவலகம் சென்று மருத்துவர் தன்னிஸ்வர் மூலே அவர்கள் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணைய குழுவை சந்தித்து மியன்மார் கடற்படை மனிதாபிமானமற்ற முறையில் சிறைப்பிடித்த இந்திய மீனவர்களை விடுவிக்க ஆணைய குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார்கள்.
இதன் அடிப்படையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்ட்டு உடனடியாக இந்திய அரசு 26.11.2021மியன்மார் அரசுக்கு அழுத்தம் கொடுத்து 29.11.2021 அன்று விடுதலை தகவலை நமது வெளியுறவுத் துறைக்கு தெரிவித்தது.30.11.2021 அன்று மியன்மாரில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை 10 மீனவர்களுக்கும் அவசர சான்றிதழ் பதிவு செய்து நாளை 02.12.2021 அன்று தாயகம் திரும்புக்கிறார்கள்.
மீனவர்கள் விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொண்ட மத்திய மீன்வளத்துறை அமைச்சருக்கும் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழியுறுத்தலுக்கும் இந்திய மீனவர்கள்,
கடல்சார் மக்கள் நல சங்கமம் மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து இது போன்ற கைது நடவடிக்கை எடுக்காதப்படி இருநாட்டு உறவுகளும் பரஸ்பரம் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.