ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவில் வார சந்தை கட்டும் கட்டிட பணி: அமைச்சர் அனிதா.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி, சந்தையடி தெருவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் மூலதன மானிய நிதி திட்டம் 2020-21ன் கீழ் புதிதாக வார சந்தை கட்டும் கட்டிட பணிக்கான பூமி பூஜையில் 

மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார். 

தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்து பிரச்சனைகளை தீர்க்கின்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். 

அதன் அடிப்படையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வார சந்தைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ரூ.1.25 கோடி மதிப்பில் 28 கடைகள் அமைக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயலர் காதர், உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், 

திமுக மாணவரணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், மற்றும் முக்கிய பிரமுகர்கள்  பெருமாள், கொம்பையா, அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post