தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பஸ் நிலையம் அருகில் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் 6 முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன இதில் மற்றும் சுற்றுவட்டார நூற்றுக்கணக்கான மேற்பட்ட கிராமத்திலிருந்து மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் கட்டிடங்கள் ஐந்து பிரிவுகளாக உள்ளன.
இதில் மூன்றாவது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சுற்றுப்புற சுவரும் சேதமடைந்தது இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினர் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக தலைமை ஆசிரியரும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர் வெள்ளைச்சாமி தூத்துக்குடி அரசு பஸ் போக்குவரத்து கழக மேலாளர் பழனியப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பள்ளி தலைமை ஆசிரியர் தகுதி தேர்வில் தாசில்தார் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.