தூத்துக்குடி மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 பயனாளிகளுக்கு உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சட்டமன்றத் உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்
கொரானாவால் தாய் தந்தைகளை இழந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் திட்டமானது சிறந்த முறையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
அன்னை சத்யா இல்லம் என்று ஒன்று இருக்கிறது. இந்த இல்லத்தின் மூலம் தாய் தந்தைகளை இழந்தவர்களை நல்ல முறையில் பராமரித்து வருகிறோம். இந்த இல்லமானது திருவைகுண்டத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இல்லம் இருப்பதற்கான விழிப்புணர்வுகளை கூட பொது மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டு இருககிறோம்.
தனிநபர் அட்டை வழங்குவதில் கூட ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதை உடனே சரிசெய்து அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாய் தந்தைகளை இழந்தவர்களுக்கு நிவாரண தொகையாக அவர்களது வங்கி கணக்கில் ஐந்து லட்சம் ரூபாயும், தாய் அல்லது தந்தைகளை இழந்தவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் தலா மூன்று லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு இருக்கிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் ஆறாயிரத்திற்கு மேல் தாய் தந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தைகளை இழந்தவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள்.
நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், வட்ட வழங்கல் அதிகாரி செல்வக்குமார், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.