ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை: கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர் மீது வழக்கு

குஜராத்தில் உள்ள  பூஜ் பகுதியில் உள்ள ஸ்ரீ சகஜானந்த் மகளிர் கல்லூரி உள்ளது. இந்தகல்லூரியில் மாதவிடாய் காலத்தின் போது மாணவிகள் கல்லூரி வளாகத்திலோ, உணவகத்திற்கு செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் சக மாணவிகளை தொட்டுப் பேசக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின.


இந்தக் கொடூரத்தின் உச்சகட்டமாக விடுதியில் இருந்த 68 மாணவிகளை உள்ளாடையைக் கழற்றவைத்து சோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அந்த கல்லூரியின் மாணவரிகளே செய்தியாளர்களிடம் நேரடியாக கூறினார்கள்.


நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்கா மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில் அவர்கள் இருவரையும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.


Previous Post Next Post